வடபழனியில் பெண்களிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள் கைது

சென்னையில் பல்வேறு பகுதியில் பெண்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
கைதான திருநங்கைகள்
கைதான திருநங்கைகள்
Published on

போரூர்:

எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 9-ந் தேதி தேன்மொழி கடைக்கு வந்த திருநங்கை ஒருவர் ஆசிர்வாதம் செய்வது போல் நடித்தார். அவரது கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 600 ரூபாயை பறித்துக் கொண்டு மொபட்டில் தப்பி சென்றார்.

இதேபோல் வடபழனி என்.எஸ்.கே சாலையை சேர்ந்த சுகுணா கடந்த 10-ந் தேதி மாலை ஜவுளிக்கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 திருநங்கைகள் சுகுணாவை ஆசிர்வாதம் செய்து பணம் வாங்கினார்கள்.

அப்போது திடீரென சுகுணாவிடம் இருந்து ரூ.10ஆயிரம் பணத்துடன் மணிபர்ஸை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பு பொன்னப்பன் தெருவைச் சேர்ந்த சைலஜா (20), காவ்யா (21) என்பது தெரிய வந்தது.

2 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com