அய்யாற்றில் மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

அய்யாற்றில் இருந்து 2 டிராக்டரில் அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசார் கண்ணனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணனூர் பகுதி அய்யாற்றில் இருந்து 2 டிராக்டரில் அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் ஏற்றி வந்த மர்மநபர்கள் போலீசாரை கண்டதும் டிராக்டர்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையம் கொண்டுவந்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com