ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள டராம்டோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர்.

இந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com