ஈரோட்டில் வி‌ஷ ஊசி போட்டு 2 மகன்கள் கொலை - தாய் தற்கொலை

ஈரோட்டில் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் வி‌ஷ ஊசி போட்டு 2 மகன்கள் கொலை - தாய் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீஜா(வயது 32).

இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன்கள் பிரனித்(6), சதீஸ் (4).

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரவீந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஸ்ரீஜா தனது மகன்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.

ஸ்ரீஜா வீடு நேற்று முழுவதும் பூட்டியே இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அருகில் வசிப்பவர்கள் ஸ்ரீஜா வீட்டின் கதவை தட்டினர்.

ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் ஸ்ரீஜாவும், மகன்கள் பரனித், சதீஸ் ஆகியோரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீஜா, பிரனித், சதீஸ் ஆகிய 3 பேரும் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது ஸ்ரீஜா தனது 2 மகன்களையும் வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு, தானும் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மகன்களை கொன்று ஸ்ரீஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஸ்ரீஜா வேலை செய்த தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் ஸ்ரீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நெருக்கம் அதிககமாகி அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் ஸ்ரீஜாவுடனான பழக்கத்தை குறைத்துக்கொண்டதாக தெரிகிறது.

இது பற்றி அந்த வாலிபரிடம் ஸ்ரீஜா கேட்டார். இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீஜா சில நாட்களாக மன வேதனையுடன் காணப்பட்டார்.

இதில் ஏற்பட்ட விரக்தியில் தான் ஸ்ரீஜா தனது மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com