பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு துணை ராணுவப் படை வீரர்கள் பலி

பாகிஸ்தான் நாட்டின் பழங்குடியினர் அதிகம் வாழும் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் கைபர்துங்கவா மாகாணத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த வசிரிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. 

இம்மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள டங்க் மாவட்டத்துக்குட்பட்ட சோதனைச்சாவடியில் பணியாற்றும் இரு துணை ராணுவப் படை இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக மசூதிக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை வழிமறித்த பயங்கரவாதிகள் கும்பல் துப்பாக்கிகளால் சுட்டத்தில் அந்த இரு வீரர்களும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com