புல்வாமா தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையின் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த 9 வீரர்களில் இருவர் இன்று உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக பாதுகாப்பு படையினர் இன்று மாலை வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.