குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பேர் தற்கொலை

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பேர் தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலத்தை அடுத்த மேல சங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 61) மரம் ஏறும் தொழிலாளி.

இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிச்சந்தை செதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45) தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சென்றும்சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த மணிகண்டன் வி‌ஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏட்டு ராம ஜெயம், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com