

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ரசண்டோங் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அம்மாவட்ட ரிசர்வ் படையினர் நேற்றிரவு அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு போலீசாரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், ரேடியோ உள்பட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.ஐ.ஜி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இருவரும் கோலபள்ளி பகுதி உள்ளூர் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.