காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் பலி
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள லார்னோ என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com