ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா என்கவுண்டர்
புல்வாமா என்கவுண்டர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், அவந்திபோரா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் உப்ரைத் பரூக் மற்றும் அப்பாஸ் பட் என தெரிய வந்துள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com