துபாய் சாலை விபத்தில் இரு இந்திய மாணவர்கள் பலி

இந்தியாவை சேர்ந்த இரு மாணவர்கள் துபாயில் கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சரத் குமார் - ரோஹித் கிருஷ்ணகுமார்
சரத் குமார் - ரோஹித் கிருஷ்ணகுமார்
Published on

துபாய்:

துபாயில் வாழும் இரு இந்தியர்கள் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் ரோஹித் கிருஷ்ணகுமார்(19), சரத் குமார்(21). கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்கள் இருவரும் துபாயில் உள்ள டெல்லி பள்ளியில்

கல்வியை முடித்துவிட்டு பட்டப்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றனர்.

இவர்களில் ரோஹித் கிருஷ்ணகுமார் பிரிட்டன் நாட்டில்  உள்ள பல்கலைக்கழகத்திலும் சரத் குமார் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திலும் பயின்று வந்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருவரும் குடும்பத்தாரை பார்ப்பதற்காக சமீபத்தில் துபாய் வந்துள்ளனர்.

நேற்றிரவு கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com