சிவகங்கை மாவட்டத்தில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

2 வீடுகளின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் அருகே உள்ள அரளிக்கோட்டையை சேர்ந்தவர் சேர்வை (வயது 65), விவசாயியான இவர் நேற்று தனது மனைவி மீனாளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தை திருடி கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய சேர்வை கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

திருப்பத்தூர் எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி லதாவுடன் திருமணத்திற்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் வெள்ளி நகை, பாத்திரங்களை திருடிக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com