காட்பாடியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உறவினர்கள் 2 பேர் கைது

காட்பாடியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உறவினர்கள் 2 பேர் கைது
Published on

வேலூர்:

காட்பாடி தாராபடவேடு 1-வது மண்டல அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது உறவினர் மகனுக்கு 17 வயதாகிறது.

இருவரும் சேர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 11 வயது மற்றும் 8 வயது மகள்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால், சிறுமிகளின் உடல் நிலை பாதித்தது. பெற்றோர், மகள்களை டாக்டரிடம் அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அப்போது, சிறுமிகள் பாலியல் துன்புறத்தலால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து, காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com