குடவாசல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து 2 விவசாயிகள் தற்கொலை

குடவாசல் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மதுவில் விஷம் கலந்துகுடித்து 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வீரகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் உதயசந்திரன்(வயது31). விவசாயி. இவர் குடும்ப செலவுக்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்து வந்த உதயசந்திரன் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) மதுவில் கலந்து குடித்துள்ளார். 

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயசந்திரன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து உதயசந்திரன் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் குடவாசல் அருகே உள்ள சற்குணேஸ்வரபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(49). விவசாயி. இந்தநிலையில் குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து மணிகண்டனின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com