2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்

14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகன் 2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
2 இரட்டை சதம் அடித்து அசத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்
2 இரட்டை சதம் அடித்து அசத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிபரல வீரர் ராகுல் டிராவிட். தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார். இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக தற்போது அவர் இருக்கிறார்.

ராகுல் டிராவிட்டின் மகன் சமித் பெங்களூரில் உள்ள மல்லையா அதிதி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த பி.டி.ஆர். ஷீல்டு 14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் இரட்டை சதம் அடித்தார்.

146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் அவர் 200 ரன் குவித்தார். சமித்தின் இந்த ஆட்டத்தால் அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன் (50 ஓவர்) குவித்தது. அடுத்து ஆடிய ஸ்ரீகுமரன் அகாடமி அணி 110 ரன்னில் சுருண்டது. இதனால் சமித் டிராவிட் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com