ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீசி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 2 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீசார்
பாதுகாப்பு பணியில் போலீசார்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜகுரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற அப்பாவி மக்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.  

X

Maalai Malar
www.maalaimalar.com