திண்டுக்கல் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திண்டுக்கல் அருகே 2 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே சிலுவத்தூரைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. அந்த சிறுமி 7-ம் வகுப்புதான் படித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர்களின் பெற்றோர்களை குழந்தைகள் நலக்குழுவினர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்திச் சென்றனர். இதே போல் வத்தலக்குண்டு அருகே உள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும், 15 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

அந்த சிறுமி பட்டி வீரன்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். திருமணம் குறித்து தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என அவர்களை எச்சரித்தனர். மேலும் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜராகவும் அறிவுறுத்திச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com