திருப்பத்தூரில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது

திருப்பத்தூரில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
திருப்பத்தூரில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த அண்ணான்டபட்டியை சேர்ந்தவர் முன்வர் (37). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் தனது ஆட்டோவில் ரூ.17 ஆயிரம் வைத்து இருந்தார்.

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த தனது ஆட்டோவில் இருந்த பணம் காணாமல் போனது அறிந்த முன்வர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி விசாரணை நடத்தி திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com