பீகாரில் பசு மாடுகளை திருடியதாக 2 பேர் அடித்துக்கொலை

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்துக்குட்பட்ட பனியாபூர் கிராமத்தில் இன்று அதிகாலை 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
கொலை
கொலை
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்துக்குட்பட்ட பனியாபூர் கிராமத்தில் இன்று அதிகாலை 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

பசுக்களை திருடியதாக கூறி அவர்களை கிராம மக்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த மாதம் ஜார்க்கண்ட் மாநிலம் கார்சவன் மாவட்டத்தில் திருட வந்ததாக கூறி தாப் ரெஸ் அன்சாரி (24) என்ற வாலிபரை ஒரு கும்பல் பிடித்து ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என சொல்லச் சொல்லி தாக்கினர். இதில் அன்சாரி பரிதாபமாக இறந்தார்.

கும்பல் அவரை தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதே போல உத்தரபிரதேச மாநிலத்திலும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதை தடுப்பதற்காக கும்பல் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் பீகாரில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com