நாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது

நாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் அதிகாலை வேளையில் வீட்டின் வாசலில் நின்றிருந்த 2 பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்வங்கள் நடைபெற்றன.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மதுரையை சேர்ந்த அஜித்குமார்(வயது21) மற்றும் விஜய்(22) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 பவுன் நகைகளை கைப்பற்றினர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com