மஞ்சூரில் அடகு கடையில் திருடிய 2 பேர் சிக்கினர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிய சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சூரில் அடகு கடையில் திருடிய 2 பேர் சிக்கினர்
Published on

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு தலையட்டியை சேர்ந்தவர் சகாதேவன். இவர் எடக்காடு பஜாரில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சகாதேவன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த கல்லாவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சகாதேவன் மஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் தவுஹித் நிஷா தலைமையிலான விரைந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்து இடமாக நின்ற 2 பேரை பிடடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது 2 பேரும் சகாதேவனின் அடகு கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் போலீசார் நடத்திய

விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com