தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் அக்பர் (வயது 32). இவர் டவுன் போலீஸ் நிலைய சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலோபாநந்தவனம், ருக்குமணி அம்மன் மண்டபம் பகுதியை சேர்ந்த செல்லன் மகன் சுரேஷ் என்ற பல்லு சுரேஷ் என்பவர் அக்பர் டீக்கடைக்கு வந்து பணம் கேட்டுள்ளார். அதற்கு அக்பர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அக்பரிடம் கத்தியை காட்டி மிட்டி அவரிடம் இருந்து ரூ.200-யை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

இதேபோல் மேம்பாலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் கார்த்திக் (27), மேம்பாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த கருப்பையன் மகன் மாரி என்ற கஞ்சா மாரி (33), கார்த்திக்கிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். உடனே மாரி, கார்த்திக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-யை பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com