கிருஷ்ணகிரி அருகே விவசாயியை கத்தியால் குத்திய 2 ராணுவ வீரர்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய 2 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள நெக்குந்தி பகுதியை சேர்ந்தவர் பேட்ராயன் மகன் தங்கவேல் (வயது 32). விவசாய வேலை பார்த்து வருகிறார்.

அதேப்பகுதியை சேர்ந்தவர்கள், இவரது உறவினர்களான நாகராஜ் மகன் உதயகுமார் (வயது 29), வெங்கடசாமி மகன் சீனிவாசன் (வயது 27) இவர்கள் 2 பேரும் இந்திய ராணுவத்தில் லக்னோவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்கவேலுவுக்கும், உதயகுமார் மற்றும் சீனிவாசனுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தங்வேலுவை தாக்கியுள்ளனர். அப்போது அங்கு கிடந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி அணை போலீசார், உதயகுமார் மற்றும் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com