ஆந்திராவில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை- சிஆர்பிஎப் அதிரடி நடவடிக்கை

ஆந்திராவில் இன்று அதிகாலை சிஆர்பிஎப் - நக்சலைட்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் பலியாகினர். ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். #AndraNaxal #ShotDead
ஆந்திராவில் 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை-  சிஆர்பிஎப் அதிரடி நடவடிக்கை
Published on

விசாகப்பட்டினம்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தின் பேடாபயலு பகுதியில் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் அங்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் முடிவடைந்த நிலையில், ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #AndraNaxal #ShotDead

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com