அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு - இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை 16 ஆனது

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மேலும் இரு பக்தர்கள் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்ததால் இந்த ஆண்டின் யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
பனி லிங்கம்
பனி லிங்கம்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அவ்வகையில், இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடையும் இந்த யாத்திரையில் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

யாத்திரைக்கு வந்த இடத்தில் உடல்நலக்குறைவு மற்றும் மிக உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறையால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் இரு பக்தர்கள் உயிரிழந்ததால் இந்த ஆண்டின் யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இறந்த இருவரில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் மற்றொருவர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com