

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 கிரக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ரெய்னா, மணீஷ் பாண்டே, உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுரேஷ் ரெய்னா சரியாக ஒரு வருடம் கழித்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை.