நடப்பாண்டில் மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம் - மெட்ரோ நிர்வாகம்

நடப்பாண்டில் மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரெயில்
மெட்ரோ ரெயில்
Published on

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோயம்பேடு- ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருமங்கலம் - சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவைக்கு பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் 19 நாட்களில் ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 29 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். நடப்பாண்டில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com