பங்களாபுதூர் அருகே துணி துவைத்த இளம்பெண் ஆற்றில் மூழ்கி பலி

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே ஆற்றில் இறங்கி துணி துவைத்த இளம்பெண் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

டி.என்.பாளையம்:

பங்களாபுதூர் அருகேயுள்ள நஞ்சை புளியம்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 19). இவருக்கு திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையம் கூனம்பட்டியை சேர்ந்த சம்பத் (30) என்பவருடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பத், மஞ்சுளா தம்பதியருக்கு சிவசங்கரன் என்கிற 4 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் தனது தந்தை வீடான நஞ்சைப்புளியம்பட்டிக்கு குழந்தையுடன் இரண்டு நாட்களுக்கு முன் வந்த மஞ்சுளா நேற்று மதியம் அருகிலுள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளார்.

ஆற்றில் இறங்கி கரையோரம் துணி துவைத்து கொண்டு இருந்த மஞ்சுளா எதிர்பாராது நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் அருகில் இருந்தோர் தீயணைப்பு துறை மற்றும் பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஆற்றில் மூழ்கி இறந்த மஞ்சுளா உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும், இவருக்கு திருமணமாகி 2 வருடமே இருக்கும் நிலையில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 4 மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில் மஞ்சுளா இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com