கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 19 பேர் அனுமதி

கோவை அரசு ஆஸ்பத் திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 19 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 114 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 19 பேர் அனுமதி
Published on

கோவை,செப்.2-

கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 3 மாதத்தில் இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் விளாங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (வயது 75) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து டாக்டர்கள் முருகேசனுக்கு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவை அரசு ஆஸ்பத் திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 19 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 114 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் சிறப்பு வார்டில் வைத்து சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com