பயங்கரவாதிகளை குறிவைக்கும் பாதுகாப்பு படைவீரர்கள்
பயங்கரவாதிகளை குறிவைக்கும் பாதுகாப்பு படைவீரர்கள்

ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் பலியாகினர்.
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென புகுந்தனர். அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. 

இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர், தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர். இதில் தலிபான் இயக்கத்தின் தளபதி முல்லா கவுசூதிங்கும் ஒருவர் என தகவல்கள் வெளியானது. மேலும் 15 பயங்கரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com