பெரு நாட்டில் சாலை விபத்து - பெண்கள் உள்பட 19 பேர் பலி

பெரு நாட்டில் மினி பஸ் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்தனர்.
சாலை விபத்து
சாலை விபத்து
Published on

லிமா:

பெரு நாட்டின் காண்டா மாகாணத்தில் மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 27 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சாலையில் இருந்து விலகி குன்றின் மீது மோதியது.

இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் 11 பெண்கள், 8 ஆண்கள் அடங்குவர் என போலீசார் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com