கேரள தங்கம் கடத்தல் வழக்கு: 180 கிலோ தங்கம் கடத்தியதாக விசாரணையில் தகவல்

தூதரகம் பெயரை பயன்படுத்தி 180 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித், ஸ்வப்னா
சரித், ஸ்வப்னா
Published on

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கேரளாவிற்கு தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள முதலமைச்சரின் அலுவகத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபர்களாக கருதப்படும் ஸ்வப்னா, சரித் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை பல்வேறு இடத்திற்குச் அழைத்து சென்று தகவலை சேரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதிக அளவில் தங்கம் கடத்தியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

தூதரகத்தை பயன்படுத்தி அவர்கள் 180 கிலோ தங்கம் கடத்தியுள்ளனர். கடத்திய தங்கத்தை கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், மொத்த கடத்தல் அதையும்விட அதிகமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். 12 முதல் 13 முறை இந்த வழியை பயன்படுத்தியுள்ளனர்’’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கத்தை கடத்தி வருவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்ததில் ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோர் பணம் கைமாறுதல் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். ஐக்கிய அரபு எமிரேட்சியல் இருந்து வெளியே இந்தியர் இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் தூதரக பாதுகாப்பை பயன்படுத்தி சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். என கூடுதல் தகவலாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com