இலங்கை - ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் அனாதைகளாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை - ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு
Published on

கொழும்பு:

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதிகள் சிலர் போலீசார் தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிககமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயங்களின் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித், ‘இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளில் தேவாலயம் கவனம் செலுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com