கர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மரங்கள் வெளியே தெரிவதை  படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மரங்கள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்.
Published on

ஒகேனக்கல்:

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 14 ஆயிரத்து 225 கனஅடியும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 17 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வெள்ள அபாயம் நீங்கியது.

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மெயின் அருவியில் தண்ணீர் குறைந்து உள்ளது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

கரையோரத்தில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். உள்ளூரை சேர்ந்த பெண்கள் ஆற்றில் துணிகளை துவைத்தனர். இதற்கு முன்பு அதிகளவில் வெள்ளம் வந்ததால் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்தனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 10-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று 38-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.

நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com