நைஜீரியாவில் எரிவாயுக்குழாய் வெடித்து விபத்து - 17 பேர் பலி

நைஜீரியாவில் நாட்டில் பெட்ரோலியம் கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் வெடித்து சிதறியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த பகுதி
விபத்து நடந்த பகுதி
Published on

அபுஜா:

நைஜீரியா நாட்டின் லகோஸ் மாகாணம் அபுலி - அடோ பகுதியில் பெட்ரோலியம் கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த எரிவாயுக்குழாய் நேற்று திடீரென வெடித்துச்சிதறியது.

இந்த விபத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட இடத்தை சுற்றியிருந்த பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com