டெல்லி: பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

டெல்லியின் பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. #BawanaIndustrialFire #DelhiFire
டெல்லி: பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவென பரவிய தீ கிடங்கு முழுவதும் பரவியது.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.#BawanaIndustrialFire #DelhiFire #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com