திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு

திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

திருவாரூர்:

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய மில்தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது அராபத். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஜாசன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று புஜாசன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com