ஈராக்கில் ராணுவம் அதிரடி - 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ராணுவம் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஈராக்கில் ராணுவம் அதிரடி - 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்னும் அவர்கள் அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு ராணுவம் அதிரடியாக சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் தொடுத்தது. இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

இதன் முடிவில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com