பாக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாக்தாத்தில் இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி
Published on

பாக்தாத்:

ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் ஏடன் சதுக்கத்தில் பாதுகாப்புச் சோதனை சாவடி உள்ளது. இன்று காலை இந்த படைத்தளத்தின் குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும், 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஈராக் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர். #baghdad #twinblast #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com