மத்தியப்பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப்பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி மரணம்
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் சிறுமி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமி மீது ஊற்றி தீவைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர்.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பண்டல்கண்ட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் இருவரை அடையாளம் கண்டு உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த  ராகவேந்திரா சென், ஷுப்ஹம் யாதவ் ஆவார்கள். இதில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

சிறுமிக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று சிறுமி சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் மரணம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com