விருத்தாசலத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

விருத்தாசலத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூரை சேர்ந்தவர் வேல்முருகன். விருத்தாசலம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த வேல்முருகன், தலைமறைவானார்.

15 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள வேல்முருகனை கைது செய்யுமாறு, விருத்தாசலம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான தனிப்படைபோலீசார், தஞ்சாவூர் மாவட்டம், கரிகாடு பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த வேல்முருகனை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com