பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: 15 பேர் பணி மாறுதல் ஆணை பெற்றனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் 15 பேர் பணிமாறுதல் பெற்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: 15 பேர் பணி மாறுதல் ஆணை பெற்றனர்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளா இடம் மாறுதலுக்கு நடத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடத்தில் காலிப்பணியிடம் ஏதும் இல்லாததால் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை.

அறிவியல் பாடத்தில் 12 ஆசிரியர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 3 ஆசிரியர்களும் ஆக மொத்தம் 15 ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் பெற்றனர். ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பிரேம்குமார், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com