

கர்நாடக மாநிலத்தின் பெங்களுரூவில் குட்டி நாய் ஒன்று உணவுக்காக வீதிகளில் சுற்றி அலைந்தது. அப்போது அங்கு குப்பை தொட்டி அருகே கிடந்த ஒரு பிளாஸ்டிக் குடத்தை பார்த்தது.
அதில் உணவு இருக்கும் என்ற எண்ணத்தில் நாய் குடத்தினுள் தலையை விட்டது. ஆனால் அதன் தலை மீண்டும் வெளியே எடுக்க முடியாமல் சிக்கி கொண்டது. இதானல் நாய் தவித்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் நாயின் தலையை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த 15 போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர். அப்போது அந்த நாய் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டது. இதையடுத்து சுவாசிக்க ஏதுவாக அந்த குடத்தில் துளை போட்டனர். பின்னர் குடத்தை பிரித்து அந்த குட்டி நாயை மீட்டனர்.