14-வது நாளாக அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14-வது நாளாக அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
Published on

தஞ்சாவூர், ஜூன்.4-

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 14-வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையை 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 14-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தினால் கிராமப் புறங்களில் அஞ்சல் சேவை பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கான உதவி தொகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com