காஷ்மீர்: பள்ளத்தில் தவறி விழுந்த பள்ளி வாகனம்: 14 மாணவ-மாணவிகள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி வாகனம் சாலையை ஒட்டியுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.
காஷ்மீர்: பள்ளத்தில் தவறி விழுந்த பள்ளி வாகனம்: 14 மாணவ-மாணவிகள் காயம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மூ-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தனு பகுதியில் இன்று மாலை, பள்ளி ஒன்றில் இருந்து வீடு திரும்புவதற்காக மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அப்பள்ளி வாகனம் சென்றது. 

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியுள்ள பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். 

துரிதமாக செயல்பட்ட மீட்புப்படையினர் அந்த வாகனத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 14 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com