திருமண கோஷ்டி சென்ற வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று திருமண வீட்டார் சென்ற வாகனம் சாலையோர கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமண கோஷ்டி சென்ற வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு பின்னர் திருமண வீட்டாரில் சிலர் ஒரு லாரியில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். எட்டா மாவட்டம், சராய் நீம் பகுதி வழியாக வேகமாக வந்தபோது, ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 28 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com