திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த 14 பேர் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை
திருச்சி மத்திய சிறை
Published on

திருச்சி:

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த 14 பேரின் தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில், அவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, தண்டனை அனுபவித்து வரும் வங்கதேச நாட்டினரின் குற்றவழக்குகள் மற்றும் தண்டனை தொடர்பான விவரங்களை ஆராய்ந்த அதிகாரிகள், 14 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, 14 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com