கற்பழிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை: பெற்றோரே வளர்க்க முடிவு

மராட்டிய மாநிலத்தில் கற்பழிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தையை பெற்றோரே வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
கற்பழிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை: பெற்றோரே வளர்க்க முடிவு
Published on

மும்பை:

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பெர்லா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பழங்குடியின மாணவி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

சில மாதங்களுக்கு முன்பு மாணவியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஏமாற்றி கற்பழித்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் மாணவி வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார்.

இந்த நிலையில் கற்பழிக்கப்பட்ட மாணவி கர்ப்பம் அடைந்தார். நாளடைவில் கர்ப்பம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

இதனால் மாணவி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தபோது யாரும் அவளை திருமணம் செய்ய முன்வரவில்லை. பெற்றோர் பராமரிப்பில் மாணவி இருந்தாள்.

இதற்கிடையே மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. மாணவியை யாரும் திருமணம் செய்ய முன்வராத நிலையில் அவளது ஆண் குழந்தையை தத்து எடுக்க பலர் முன் வந்தனர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் கூறும்போது, “குழந்தையை யாருக்கும் தத்து கொடுக்க மாட்டோம். நாங்களே வளர்ப்போம்” என்றனர்.

மாணவி கூறும்போது, “கர்ப்பம் ஆனதால் நான் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். இனி பள்ளிக்கு செல்லாமல் குழந்தையை கவனிப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com