ஆண்டிபட்டி அருகே பெற்றோர் இறந்த துக்கத்தில் 13 வயது சிறுமி தற்கொலை

ஆண்டிபட்டி அருகே பெற்றோர் இறந்த துக்கத்தில் அவரது மகளான 13 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வருஷநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரும் இவரது மனைவியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் இவர்களது மகள் கனிமொழி (வயது 13) தனது பெரியம்மா ஈஸ்வரி என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

தனது பெற்றோர் இறந்ததில் இருந்து மிகுந்த மன வருத்தத்தில் கனிமொழி இருந்தார். இதனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று தனது பெரியம்மா வீட்டிலேயே கனிமொழி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com