வயல்காட்டில் 13 சிறுமியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று இயற்கை உபாதையை தீர்க்கச் சென்ற 13 வயது சிறுமியை கற்பழித்து, கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வயல்காட்டில் 13 சிறுமியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் பன்குரா மாவட்டத்தில் உள்ள லால்பந்த் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இன்று காலை காலைக் கடன்களை கழிப்பதற்காக வீட்டின் அருகாமையில் உள்ள வயல்காட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த சுமார் 19 வயது மதிக்கத்தக்க நபர் அந்த சிறுமியை கற்பழித்ததுடன், அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்று விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த காட்சியை நேரில் பார்த்த சிறுமியின் தம்பி அளித்த வாக்குமூலத்தின்படி அந்த வாலிபரை கைது செய்த டல்டங்ரா பகுதி போலீசார், சிறுமியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com